குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரியில் நடந்துள்ளது.
குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஓற்பாட்டில் அக்கராயன் உழவர் கழகத்தினால் நடத்தப்பட்ட குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றியிருந்தன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித்த போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. குறித்த போட்டியில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 98 ஜோடிகள் அழைத்து வரப்பட்டு விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. அதி கூடிய ஜோடிகள் பங்குபற்றிய முதலாவது போட்டி இது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.