புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று (10.09.18) காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய்யப்பட்ட தவிசாளரை பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புத்தளம், மதுரங்குளம் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் இவரிற்கு வெளிநாடு செல்வதிற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இவர் நீதிமன்ற தீர்ப்பை கருத்திற்கொள்ளாது வெளிநாடு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.