குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கடண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 35 ற்கும் அதிகமான அப்பாவி பொது மக்களை நினைவு கூர்ந்து வட்டக்கண்டல் சுடரொலி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை வட்டக்கண்டல் மைதானத்தில் இடம் பெற்றது.
இறுதிச் சுற்றிற்கு தெரிவான ஆண்டாங்குளம் சென்.தோமஸ் அணியினருக்கும், முத்தரிப்புத்துறை சென்.ஜோசப் அணியினருக்கும் இடையில் இடம் போட்டி பெற்றது. இதன் போது 2-0 என்ற அடிப்படையில் ஆண்டாங்குளம் சென்.தோமஸ் விளையாட்டு அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கேடையத்தை சுவீகரித்துக் கொண்டனர்.