178
திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் யோகி பாபு அடுத்து, கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். லொள்ளுசபா மூலம் அறிமுகமான யோகிபாபு ஆரம்பத்தில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடித்ததுடன் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதுவரையில் 100இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்கள் நாயகன் அவதாரம் எடுத்து வருவதும் திரையுலகில் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் வடிவேலு, விவேக், சந்தானம் முதலியோரைப்போல யோகிபாபுவும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்த இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்துக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என முடிவு செய்து அவரை அணுகியுள்ளார்.
கதை பிடித்துபோக அவர் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு தனியார் பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார். பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் அவரோடு ஒரு நாயும் நடிக்க உள்ளது.
Spread the love