இலங்கையில் தற்போது நடைமுறையிலுள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான சட்டமூலமொன்றை, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று (11.09.18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பித்ததோடு, அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்தப் புதிய சட்டமூலத்தில், அத்தியாவசியமான காரணிகள் சில உள்ளடங்கவில்லை என்று, அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஸ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.