வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியதென்பதனால் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்வோம்எனத் தெரிவித்த அவர் இந்தியாவுடன் உறவுகளைப் பலப்படுத்தவே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றினை தாம் இந்திய உதவியுடனேயே மேற்கொள்ளத் திட்டமிட்டதாகவும் எனினும் அப்போது இந்தியா முன்வராமையினாலேயே சீனாவுடன் இணைந்து அவற்றை மேற்கொண்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.