166
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் இன்று (14.09.28), உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, இவர்கள் இன்று காலை, 8 மணிமுதல் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கைதிகள், கடந்த யுத்தகாலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் அனைவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love