அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் , வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியதுடன் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கோரப்பட்டள்ளனர்.