Home பிரதான செய்திகள்உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை டோனி இந்திய அணியில் விளையாட வேண்டும்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை டோனி இந்திய அணியில் விளையாட வேண்டும்

by admin

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய அணியில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்த்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார்.

தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கிண்ண போட்டிக்கு முன் 15 அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார். அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அந்தவகையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண தொடரில் இந்தியா கிண்ண வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என சேவாக் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More