168
நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு கிராமங்களில் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love