இஸ்ரேல் – பலஸ்தீன நாடுகளுக்கிடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்தான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை உரிமையாக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர்.
ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீனியர்கள் வசித்து வருகின்ற நிலையில் அப்பகுதியில் இஸ்ரேல் அத்துமீறி அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றநிலையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது