159
பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் காவல் நிலையத்தில் நேற்றையதினம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் மக்சுடான் காவல் நிலையத்தை குறிவைத்து, சுமார் மாலை 5 மணியளவில் சிலர் மேற்கொண்ட இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love