நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நிகழ்வை நடாத்த முனைந்த போது மூத்தரப்புகளிடையே முரண் நிலை தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக உறுப்பினர்கள் என பல தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றதாக அறிவித்த நிலையில் அங்கே பிரசன்னமாகியிருந்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டனர்.
இதனை அவதானித்த ஒரு தரப்பினர் பாடலை அதிக சத்தத்துடன் ஒலிக்க விட்டதாகவும் இதனையடுத்து தான் பேச விரும்பவில்லை என அவைத் தலைவர் பதிலளித்ததாகவும் நினைவுத்திடலில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அவதானித்த ஒரு தரப்பினர் பாடலின் ஒலியை குறைக்குமாறு கோரியதனால் மேலும் சத்தத்தினை அதிகரித்த நிலையில் “நிகழ்வு முடிந்தால் போகவேண்டியதுதானே பிறகு என்ன அரசியல்” என வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்போது தர்க்கத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும், நானும் இயக்கம்தான் என கூறியவாறு மோதல் நிலைக்கு சென்றதனால் பதற்றம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.