பங்களாதேஸ் அணியின் ஆட்டக்காரர் தமிம் இக்பால் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி நேற்றையதினம் துபாயில் இலங்கை, மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. இதன் போது சுரங்க லக்மல் வீசிய பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்ட போது அந்த பந்து அவரது இடது கையில் பட்டு உபாதையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதனையடுத்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து தமிம் இக்பால் வெளியேறினார்.இந்தப் போட்டியில் பங்களாதேஸ் அணி 137 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கையை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது