Home பிரதான செய்திகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் – பங்களாதேஸ் 137 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பங்களாதேஸ் 137 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கையை வென்றுள்ளது.

by admin


இன்று துபாயில் நடைபெற்ற 14-வது நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஸ் அணி 137 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில் மலிங்க 4 விக்கெட்டுக்களையும் , தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் வீழ்திதயிருந்தனர்.
இதனையடுத்து 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததனையடுத்து பங்களாதேஸ் அணி 137 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More