Home இந்தியா சீன எல்லையில், படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை –

சீன எல்லையில், படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை –

by admin


சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் எல்லைக்கு அருகே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கும் டோக்லாமில் சீன படைகள் மேற்கொண்ட சாலைப்பணிகளை கடந்த ஆண்டு இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், இரு நாடுகளும் அங்கு கூடுதல் படைகளை குவித்தன. இதனால் அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப்பின், சுமார் 70 நாட்கள் நீடித்த இந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் படைகளை அங்கிருந்து விலக்கிக்கொண்டன. எனினும் சீன எல்லையில் வழக்கத்தை விட கூடுதல் படைகளை இந்தியா தொடர்ந்து குவித்து கண்காணித்து வருகிறது.

டோக்லாம் பிரச்சினையை தொடர்ந்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. எனினும் சீன எல்லையில் இருந்து படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த அவர்,

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த ஏப்ரல் மாதம் வூகன் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. இருநாடுகளும் தங்கள் எல்லையோர நிர்வாகம் குறித்தும், இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விரிவான முடிவு எடுத்துள்ளன. இந்த அமைதி நடவடிக்கைகள் பயன்தரும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் வூகன் பேச்சுவார்த்தை உத்வேகத்தை அளித்தாலும், ஒரு பாதுகாப்பு அமைச்சராக, இந்திய படைகளை உஷாராக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு தனக்கு உண்டு. நிச்சயமாக, சீன எல்லையில் இருந்து படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை பொறுத்தவரை, இரு நாடுகளும் எல்லையை நிர்ணயிக்காத பகுதிகள் ஏராளம் அங்கே இருக்கின்றன. இதனால் எல்லை விஷயத்தில் இந்தியா ஒரு கருத்து கொண்டிருந்தால், அவர்கள் மற்றொரு கருத்தை வைத்திருப்பார்கள். இதனால் அவ்வப்போது எல்லை பிரச்சினை உருவாகி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More