185
ஜெர்மனியின் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சம்பியனான கென்யாவின் எலியாட் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளதுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். எலியாட் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இதே பேர்லினில் இடம்பெற்ற போட்டியில் கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ 2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்தமையே சாதனையாக இருந்தது. அதனை 33 வயதான எலியாட் முறியடித்துள்ளார்.
Spread the love