Home உலகம்சீன பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவிக்கிறார் டிரம்ப்…

சீன பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவிக்கிறார் டிரம்ப்…

by admin

2

200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மற்றுமொரு அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து அது வர்த்தக போராக மாறி உள்ளது.

சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில் சீனா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

எனினும் சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என தெரிய வந்து உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறும்போது, சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிதிச் செயலர் ஸ்டீவன் மனுசின், சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்கூட, சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சீனாவின் 267 பில்லியன் டொலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த 7ம் திகதி எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறும்போது, சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிதிச் செயலர் ஸ்டீவன் மனுசின், சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்கூட, சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சீனாவின் 267 பில்லியன் டொலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த 7-ந் தேதி எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More