ஈவன் கொழும்பு 2018 என பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றையதினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மகாநட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 101 பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அபிவிருத்தி செயற்பாடுகளின் பங்காளிகளும் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையின் தேசிய மதிப்பீட்டுக் கொள்கை இந்த மாநாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இது நாட்டின் மதிப்பீட்டு தொடர்பான வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக இருக்குமெனவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் உலக நாடுகள் சிலவற்றில் இலங்கையும் இணைந்து கொள்கிறது. தெற்காசியாவில் அவ்வாறான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு நாடு இலங்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.