குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று(17) கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி காவல்துறையினர் பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த காவல்துறையினர் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதன்போது குறித்த இரு வாகனங்களும் , சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் குறித்த கஞ்சா பொதி எடுத்து வரப்பட்டு, குறித்த பகுதியில் மெத்தை ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்து பொலநறுவை பகுதிக்கு எடுத்த செல்ல தயாராக இருந்தபோதே மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மற்றய இருவரில் ஒருவர் குருணாகல் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளை தொடரந்து கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும் காவல்துறையின மேலும் தெரிவிக்கின்றனர்.