முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு எவ்விதமான சட்டச் சிக்கலும் இல்லையெனத் தெரிவித்துள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஒன்றிணைந்த எதிரணியோ அவருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்பதற்காக சந்திக்குச் சந்தி அவரின் புகைப்படத்துடன் கூடிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் சார்க் வலையமைப்பு நாடுகளின் சிரேஷ்ட தலைவர் என்றவகையிலே அவருக்கு கௌரவமளிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்