160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவின் தமிழக அரசாங்கத்தால் யாழ் பொது நூலகத்திற்கு ஐம்பதாயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் கையளித்தார்.
இந் நிகழ்வு யாழ் பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரே, மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட இலங்கை மற்றும் இந்திய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் , சனசமூக நிலையங்கள் என்பன புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினூடாக நிதி கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
Spread the love