188
வேலைவாய்ப்பு விளம்பரங்களில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து முகப்புத்தக நிறுவனம் மீது அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் அமெரிக்க வேலைவாய்ப்பு சமத்துவ ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாட்டில் முகப்புத்தகத்தில் வெளியான 10 வேலைவாய்ப்பு விளம்பரங்கள் 25 முதல் 35 வயது வரையிலான ஆண்களை மட்டுமே இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது என சுட்டிக்கப்பட்டுள்ளது.
ஒஹையோ, பென்சில்வேனியா, இல்லினோ ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு வேலைவாயப்பு குறித்த விளம்பரங்கள் தெரியவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love