Home உலகம் வாக்குறுதியை திரும்ப பெற்ற ஜாக் மா :

வாக்குறுதியை திரும்ப பெற்ற ஜாக் மா :

by admin
Alibaba Group co-founder and executive chairman Jack Ma attends the WAIC (World Artificial Intelligence Conference) in Shanghai, China, September 17, 2018. REUTERS/Aly Song

உலகின் மிகப் பெரிய இணையத்தள வணிக நிறுவனமான அலிபாபாவின் மூலம் அமெரிக்காவில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக அதன் நிறுவன தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வழியேயில்லை என அவர் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் அலிபாபாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிiடையேயான வர்த்தகத்தில் நிலவும் குழப்ப நிலை பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என ஜாக் மா பேசியிருந்த நிலையில் தற்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More