Home இலங்கை19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

by admin

பங்களாதேசில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் யாழ். மத்திய கல்லூரி மாணவரான செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுசன், உடற் தகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாகவே அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை என்றபோதிலும் பின்னர் அவர் உடற் தகுதிச் சோதனையில் வெற்றியடைந்துள்ளநிலையில் தற்போது அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More