கானாவில் வடக்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தலத்த மழை பெய்து வருவதனால் , அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், அங்குள்ள புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதைத்தொடர்ந்து, கரையோரம் வசித்த மக்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளப் பெருக்கால், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்