குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லீம், சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற வேலை திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை நிறைவு பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் அளவக்கை,வட்டக்கண்டல் ,ஆண்டாங்குளம் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அங்கத்தினரை உள்ளடக்கிய பரிமாற்று வேலைத்திட்ட குழு கடந்த புதன் கிழமை (19) காலை பதுளை நோக்கி பயணமானது.
பதுளையில் உள்ள சமய நல்லிணக்க குழுவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டதுடன் பதுளை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில் பௌத்த விகாரை மற்றும் முஸ்லீம் அரபு கல்லூரிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அத்துடன் 2018ஆம் ஆண்டுக்கான பொது ஹச் விழாவும் அணைத்து மத தலைவர்களை உள்ளடக்கி இடம் பெற்றது. மன்னார் மாவட்டதில் இருந்து பயணமான ஒவ்வொரு தமிழ் முஸ்லீம் குடும்பத்தையும் பதுளையை சேர்ந்த ஒவ்வொரு சிங்கள குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று உபசரித்தமை குறிப்பிடதக்கது.