இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதை மறுக்குமாறு, மாயா அருட்பிரகாசம் கோரிக்கை….

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….


இத்தகைய மனிதஉரிமைமீறல் தொடர்பான பரப்புரையின் போது, அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதற்கு உதவாமால் இருக்குமாறு அவுஸ்திரேலிய எயார்லைன்சினை மேற்கிசைப்பாடகி மாயா கேட்டுக்கொண்டுள்ளதாக “தகார்டியன்” செய்தியிட்டுள்ளது.

கடந்தவாரங்களில் குறைந்தது அரசியல்தஞ்சம் கோரிய 12 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற மேன்முறையீடு நிலுவையில் இருந்தும் கூட ஈராக்கியர் ஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள், ஏதிலிகள் குறிப்பாக படகுமூலம் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிலும் அதன் கடல்சார்ந்த பகுதிகளிலும் வந்திறங்கிய ஆயிரக்கணக்கானோர் தொடர்பிலான நாடுகடத்தல்கள் என்பது அவுஸ்திரேலியாவின் கடுமையான குடியேற்றக்கொள்கைகளின் ஒருபகுதியாகும். அவஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் ஏதிலிக் குழந்தைகள், பெண்கள்மற்றும் ஆண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பது தொடர்பான கதைகள் மனகிற்குக் கவலை தருகின்றன என மாதங்கி அருட்பிரகாசம் என்ற இயற்பெயரையுடைய மாயா அவுஸ்திரேலியா கார்டியனுக்குத் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏதிலிகளைக் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தாது எனில், அவர்கள் அமைதியாகத் தமது வாழ்வை மீளக்கட்டியமைத்துக்கொள்ள நல்லவாய்ப்புகளை வழங்குவதை உறுதி செய்வது எம் ஏனையோரின்கடமையாகும்”, எனஅவர்மேலும்தெரிவித்தார்.

மாயா பிரித்தானியாவில் பிறந்த கலைஞரும் செயற்பாட்டாளருமாவார். இவர் தனது தாய்தந்தையருடன் இலங்கையிலும் இந்தியாவிலும் வளர்ந்தார். இவரது தந்தை ஈரோஸ் இயக்கத்தின் உருவாக்கத்தில் பங்காற்றிய செயற்பாட்டாளராவார். அவரது குடும்பம் இடம்பெயர்ந்ததன் பின்பு மாயா அவரது தாய்மற்றும் சகோதரர்களுடன் ஏதிலியாக இங்கிலாந்து திரும்பினார்.

இவர் அண்மையில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார். இலங்கைத் தமிழ் ஏதிலிகள் மற்றும் ஏதிலிகள் தரக்குறைவாக நடத்தப்படுவதற்கெதிராக இவர் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். அடிக்கடி அவுஸ்திரேலியா அரசியல் தஞ்சம்கோரிய இலங்கை ஏதிலிகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதற்கெதிராகத் தற்போது மாயா தனதுபார்வையைத் திருப்பியுள்ளார்.

“நாடுகடத்தல் என்பது ஒரு தெரிவேயல்ல. ஐக்கியநாடுகள்சபை அடங்கலான பல்வேறு அமைப்புகள் இலங்கையில் இன்னமும் துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் தொடருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதில் பங்களிக்காமல் அதனை மறுப்பதனூடாக மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதில் பங்களிக்கும் வாய்ப்பினை அவுஸ்திரேலியா எயார்லைன்ஸ் பெறலாம்”. என மாயாதெரிவித்தார்.

நிறுவனங்களை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், மற்று சர்வதேசசட்டங்களைப் புறக்கணிப்பதானது நிறுவனத்தின் நற்பெயரைச் சேதப்படுத்துவதோடு அதனது வணிகநலன்களையும் பாதிக்குமென்றும் கூறும் பொதுஅறிக்கையில் கையெழுத்திட்ட வணிகர்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஒன்றியங்கள் மற்றும்கல்வித்துறை சார்ந்தஅமைப்புகள் போன்ற 60 இற்கு மேற்பட்டோருடன் மாயாவின் குரல்இணைகிறது.

சில வெளிநாட்டு விமானசேவைகள் செய்வதைப் பின்பற்றுமாறும் வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதைப் புறக்கணிக்குமாறும் ஒன்றியங்கள், இதற்கெதிராகக் குரலெழுப்பும் அமைப்புகள் மற்றும் மக்கள் “Quantas” இனை நோக்கித் தீவிர லொபியில் ஈடுபடுகின்றனர்.

சட்டவிரோதக் குடியேற்றவாதிகள் என வகைப்படுத்தப்பட்டோரினை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதில் பிரித்தானியாவின் உள்துறைக்கு மேலும் உதவப் போவதில்லை என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட வேர்ஜின் அட்லான்டிக் யூன்மாதம் தெரிவித்துள்ளது.

நாடுகடத்துவதற்கான வணிக ஒப்பந்தங்களை அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக்கொள்வதில் Quantas போன்ற விமானசேவை நிறுவனங்களுக்கு வணிக ஆபத்து இருந்ததாக கூட்டாண்மைப் பொறுப்புக்கான அவுஸ்திரேலிய மையத்தின் (ACCR) நிறைவேற்று இயக்குநர் பிரன் ஒபிறைன் அவுஸ்திரேலிய கார்டியனுக்குத் தெரிவித்துள்ளார்.

வலுக்காட்டாய நாடுகடத்தலுக்கு உட்படப்போபவர்கள் கைவிலங்கிடப்பட்டுக் காவலர்களுடனே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் அழைத்துச் செல்லப்படுவர். இலங்கையர்கள் சார்டர் விமானம் மூலமே இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். பேர்த்திலிருந்து பக்தாத்திற்கு வர்த்தக விமானம் மூலமே அந்த ஈராக்கியநபர் அனுப்பிவைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஏராளமான விமானங்கள் இரவுநேரத்தில் புறப்படுவதால் அவர் எந்தவிமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது இன்னமும் தெரியவில்லை. ஆனால் Quantas விமானசேவையானது தான் மத்தியகிழக்கு நாடுகளிற்கு சேவையாற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேன்முறையீடு நீதிமன்றில் உள்ள ஒருவரை வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதில் விமானசேவைகள் பங்களிக்கின்றன என RACS என்ற அமைப்பின் முதன்மை சொலிசிட்டரான சராடேல் தெரிவித்துள்ளார்.

இறுதி நிமிடத்தில் விளக்கமளிக்கப்படாமல் சிட்னியிலிருந்து பேர்த்திற்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஈராக்கைச் சேர்ந்த இன்னுமொரு நபரின் குடும்பத்தினர் கேள்வி யெழுப்பியுள்ளனர். அரசியல் தஞ்சம் கோருபவர்களை நாடுகடத்துவது தொடர்பாகப் பேசும் பெண் ஒருவர், இது ஒரு முக்கிய பிரசனை என Quantas புரிந்து கொள்வதாகக் கூறியுள்ளார். சமஸ்டி அரசாங்கமும் நீதிமன்றமும் இப்படிச் சிக்கலான முடிவுகளை எடுக்கின்றதே தவிர விமான சேவைகளல்ல.. என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏதிலிகளின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கை சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமது இலாபத்திற்காக இந்த நாடுகடத்தல்களில் பங்களிக்கும் விமானசேவைகள் அடங்கலான வணிக நிறுவனங்கள் மனித உரிமைகளைக் காக்காமல் துஸ்பிரயோகம் செய்வதோடு தங்களது நற்பெயரையும் களங்கப்படுத்தி வணிக ஆபத்தைத்தாமே தேடிக்கொள் கின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link