மேற்கிந்தியதீவுகள் அணியின் பயிற்சியாளரான ஸ்ருவார்ட் லோ(Stuart Law) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் மேற்கிந்தியதீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ஸ்ருவார்ட் லோ எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியா மற்றும் பங்களாதேசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் இந்த தொடர்கள் முடிந்தவுடன் பதவி விலகும் அவர் மிடில் செக்ஸ் கழக அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்ருவார்ட் லோ தலைமையில் மேற்கிந்தியதீவுகள் பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ளதுடன் இங்கிலாந்தில் 17 வருடத்திற்குப் பின்னர் நடைபெற்ற போட்டியிலும்; வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது