Home இலங்கை மகிந்தவின் ஒன்பதாண்டு ஆட்சியில் அச்சமற்று வாழக் கூடிய ஒரு கொள்கை இருந்தது! கோத்தபாய….

மகிந்தவின் ஒன்பதாண்டு ஆட்சியில் அச்சமற்று வாழக் கூடிய ஒரு கொள்கை இருந்தது! கோத்தபாய….

by admin

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒன்பதாண்டு காலத்தில் அச்சமற்று வாழும் ஒரு கொள்கை இருந்ததாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அங்கு கோத்தபாய தெரிவித்த கருத்து,

“நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்ஸவின் 9 ஆண்டு கால ஆட்சி காணப்பட்டது. பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற நாட்டில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சர்வ இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய ஒரு கொள்கை முன்னெடுக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனை ஊடாக நாட்டின் விவசாயிகளுக்கு சிற்நத சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று தேசிய வர்த்தகங்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் என பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மஹிந்தராஜபக்ஸ  ஆட்சி காலத்தில் பாரிய யுத்திற்கு முகங்கொடுத்தும் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படாது முன்னோக்கி கொண்டு சென்றோம். ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலையான கொள்ளையோ பொருளாதார இலக்குகளோ அற்ற நிலையில் நாடு படு பாதாளத்தில் விழுந்துள்ளது. முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது. நான்கு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போனது.

பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் அரசாங்கம் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்தின் ஊடாக வெற்றி இலங்கை அடைவதற்கான கொள்கைகளை தயாரித்து வருகின்றோம். தொழில் சார் நிபுணர்கள், புத்தி ஜீவக்ள உள்ளிட்ட பல் துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்களை உள்வாங்கி திட்டமிடுகின்றோம். எதிர் தரப்பினரை பழிவாங்கும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

இன்று நாட்டில் பல்வேறு வகையிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் , பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. வடக்கில் இராணுவம் போரிடும் போது தெற்கில் நகரங்களைப் பாதுகாப்பதில் பொலிஸார் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ஆனால் இன்று பல்வேறு வகையிலும் அவர்கள் பழிவாங்கள்களுக்கு உட்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் காவற்துறைமா அதிபர்கள் நேர்மையாகச் செயற்பட்டனர்.

கட்டுநாயக்கவில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடுத்து அப்போதைய காவற்துறைமா அதிபர் 2 வருடங்களுக்கு முன்பதாகவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால் இன்று காவற்துறைமா  அதிபரின் செய்றபாடுகள் கோமாளித்தனமாக உள்ளதை ஊடகங்களில் காண முடிகிறது.

புதிய நீதி மன்றத்தை ஸ்தாபித்து அதில் முதலாவது வழக்காக டீ.ஏ.ராஜபக்ஸ நினைவு தூபி அமைத்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நினைவு தூபி அமைத்தமை தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதாக காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இவர்கள் கொண்டு வந்த அமைதி என்ன? பாரிய போரை நிறுத்தி மஹிந்தராஜபக்ஸ நாட்டில் உருவாக்கிய ஜனநாயத்தையும் சமாதானத்தையும் யாரும் மறந்துவிட முடியாது. நாட்டைக் கையளிக்கும் போது யாருக்கும் அச்சுறுத்தல் இருந்ததில்லை.

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது. தேசிய பாதுகாப்புக்காக நிறுவப்பட்டிருந்த புலனாய்வு திட்டங்கள் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் சீரழிந்து விட்டது. புலனாய்வு பிரிவுகளில் எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை.

ஆகவே வெளிப்படையாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவர் ஒருவரினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஸ போன்று வெளிப்படையாக தீர்மானங்கள் எடுக்கக் கூடிய தலைவருடன் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar September 25, 2018 - 7:57 pm

One way it is true. Where they are the mastermind.. Though other could not rise up.Even current turmoil in favour of this company. In fact no one can’t deny those development projects were instigated by their regime had been in power.May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More