கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். .
கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை கொல்லப்பட்ட கனகசபை ராமதனின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.