149
தியாகி திலீபனின் 31 ம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பதாக நினைவேந்தல் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது. பருத்தித்துறை மருத சிவன் கோவிலடி வளாகத்தில் போர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பதாக தியாகி திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவீரன் ஒருவரின் தாயார் ஈகைச் சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.இந் நினைவேந்தலில் EPRLF தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் பருத்தித்துறை நகர்,பிரதேச சபை,கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love