Home இலங்கை இலங்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை :

இலங்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை :

by admin

இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப பீடத்தின் கட்டிடம், வகுப்பறை கட்டிடம்,பெண் ஆசிரியர்களுக்கான விடுதி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (26.09.2018) பாடசாலை அதிபர் ரி..தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,,,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகின்ற பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கின்றார். எங்களுடைய உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்பதை உறுதியாக தெரிவித்திருக்கின்றார்.

அதே நேரத்தில் எங்களுடைய நாட்டில் தற்பொழுது நடை முறைபடுத்தப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் சர்வதேச முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய இலக்கை விரைவாக அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் , குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வலய கல்வி பணிப்பாளர் திருமதி.செலின் சுகந்தி செபஸ்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More