இந்திய முன்னாள பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிநையில் வைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆளுனர் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டு;ளளது.
அண்மையில் 7 பேiயும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுனர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது. அந்த பரிந்துரையை ஏற்ற ஆளுனா சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதேவேளை ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் ஆளுனரை சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆளுனரை சந்தித்துப் பேசிய பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது எனக் கேட்டுக் கொண்டதுடன் தாம் அவர்களை விடுதலை செய்யக் கூடாது என தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றில் நிலுவையில் இருப்பதால் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது எனவும் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களது கோரிக்கையையும் ஆளுனர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் 7 பேரின் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்னரேயே ஆளுனர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.