Home இந்தியா நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..

நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..

by admin


நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் சதீஷ் தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரகாசிக்கிறார். அண்மையில் வெளியான தமிழ்ப்படம் 2 திரைப்படத்தில் ஹொலிவுட், கோலிவுட் என பல வில்லன்களின் பாத்திரங்களைில் நடித்து கலக்கியிருந்தார்.

அடுத்ததாக, அதர்வாவுடன் பூமரங், ஜிவி.பிரகாஷின் 4ஜி, 100% காதல் சிவகார்த்திகேயன் படம் என பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இலங்கை சென்ற சதீஷ், யாழ்பாணத்தில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை ருவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நேற்று திலீபனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பார்த்திபன் ராசையா எனும் இயற்பெயர் கொண்ட திலீபன் இலங்கையில் பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன் நீர் ஆகாரம் இன்றி செப்டம்பர் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார். 23 வயதில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் நினைவுநாள் தமிழ் உணர்வாளர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது. திலீபனின் நினைவு நாளான நேற்று சதீஷ் இந்த புகைப்படத்தை ருவிட்டரில் பதிவிட்டதற்கு பலரும் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More