ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இருவேறு வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது. ஆப்கானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கப்சியா மாகாணத்தின் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் எனவும் இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வார்டாக் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் எனவும் இதில் இறந்தவர்கள் 6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் தலிபான்கள் அல்லது ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கடந்த ஆறுமாதங்களில் ஆப்கானில் 62 சதவீமம் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை வார்டாக் மாகாணத்தில் 8 ராணுவ வீரர்களை தலிபான்கள் கடத்தி சென்றுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.