167
தோப்பூர், வீரமாநகர் பகுதியிலிருந்து வெருகல் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற உழவு இயந்திரம், கட்டுப்பாட்டை இழந்து மாலை குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 64 வயதான தோப்பூர், வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பு ஓவியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 17 பேர்களில், ஐந்து பேர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சேருநுவர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love