Home இலங்கைவஜிர அபேவர்த்தன – ஜே.சி. அலவத்துவல இன்று யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

வஜிர அபேவர்த்தன – ஜே.சி. அலவத்துவல இன்று யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

by admin

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துவல ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் செல்கின்றனர்.  அமைச்சுக்களின்  53 அதிகாரிகள் சகிதம் இன்று யாழ் செல்லும் அதிஅமைச்சர்கள் இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமையவும், பிரதமரின் ஆலோசனைக்கு அமையவும் நிலமெஹ்வர என்ற ஜனாதிபதி மக்கள் சேவையை யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பதற்காகவே அவர்கள் யாழ் செல்கின்றனர்.

இந்தச் சேவை இன்று சாவகச்சேரி ரிபேர்க் கல்லூரியில் இடம்பெறுவதுடன் சனிக்கிழமை சங்கானை இந்துக் கல்லூரியிலும், ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் திங்கட்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளன.

சாவகச்சேரி, சங்கானை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More