ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா இன்று காலை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நீதவான் உத்தரவு ஒன்றிற்கு அமைய அவருடைய குரல் மாதிரி ஒன்றை வழங்குவதற்காகவே நாலக்க சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும் படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாலக்க சில்வா தெரிவித்திருந்தாரென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது நாமல் குமார தெரிவித்திருந்தமை தொடர்பில் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது