அரசாங்கம் மஹிந்தவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று பொது எதிரணியினர் தெரிவிப்பது பொருத்தமற்ற விடயம் எனத் தெரிவித்த என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கு மட்டும் ஒரு நாளைக்கு 35 இலட்சம் செலவாகுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொதாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கோத்தபாயவுக்கு 42 விசேட அதிரடி படையினரும் , 28 இராணுவத்தினருமாக மொத்தம் 70 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 6 அதிரடி படையினரும், 14 காவல்துறைப்பிரிவினருமே பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் கோத்தபாயவுக்கு அரசாங்கம் முழுமையான பாதுகாப்பினையே வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.