கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக கடந்த இரு மாதத்திற்கு முன்பாக மாயவனூர் முன்பள்ளி மற்றும் பொதுநோக்கு மண்டபம் சனசமூக நிலையம் ஆகியவற்றுக்காக பொருத்தப்பட்ட நீர்க்கு குழாய் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களின்hல் உடைக்கப்பட்டுள்ளது.
இந்தப்பகுதியில் நீண்டகாலம் குடிநீர் பிரச்சினை நிலவி வந்தநிலையில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திரு புவனேஸ்வரன் குறித்த பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செயற்படுத்தப்பட்டது.
ஏராளமான மக்கள் இக் குடிநீரைப் பயன்படுத்தி வந்தநிலையில் மற்றுமொரு கட்சியினால் இப் பகுதியில் தண்ணீர் தாங்கி ஒன்று வைக்கப்பட்டு பின்னர், அகற்றப்பட்டுள்ளது. கட்சிப் போட்டி காரணமாக குடிக்கும் குடி நீரை தடுப்பது மிகுந்த அநிநயாமான செயல் என பிரதேசத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை இந்த அசம்பாவிதம் தொடர்பில் கிளிநொச்சி இராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த, முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.