இலங்கை பிரதான செய்திகள்

இராணுவ வீரர் கொலை – இரு இராணுவத்தினர் இடைநிறுத்தம்


அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ நீதிமன்றம் மற்றும் இராணுவ காவல்துறையினரால் அவர்கள் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் காவல்துறையினரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட உள்ளதுடன் குறித்த இருவரினதும் சம்பளமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலையில் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் அதே முகாமில் பணியாற்றிய இரண்டு இராணுவ வீரர்கள் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கொலை செய்வதற்காக பயன்படுத்திய கத்தியும் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காணாமல் போயிருந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap