இறுதி யுத்தத்தின் போது தானோ மகிந்த ராஜபக்ஸவோ கோத்தபாய ராஜபக்ஸவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது அனைத்து தலைவர்களும் ஓடி ஒளித்துக்கொண்டிருந்தார்கள் என ஜனாதிபதி நியூயோர்க்கில் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் கடமை எனவும் இதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிவாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் தான் சீனாவிற்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
மேலும் யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது எனவும் இறுதி இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தாக்குதலை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.