மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். எனினும் அவரை அழைத்து வந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்றும், மாத்திரை மாத்திரம் கொடுத்து அனுப்புமாறும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளி, அவரது உடல்நிலை இருக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார். மருத்துவரின் தொடர்ச்சியான பரிந்துரை காரணமாக தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் ஐஆஊரு எனும் நோயாளர் விடுதியில் திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தியின் உடல்நிலையை சிதைப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வேலை செய்கிறதோ என்கிற ஐயத்தினை காவல்துறையினரின் நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளதாக மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
1 comment
பலர் உங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள இதுவே சிறந்த நேரம். நான் அந்த மக்களில் ஒருவனாக இருக்கிறேன்.
தடுப்புக்காவலில் இருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, விரைவில் நீங்கள் குணமாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.