சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பதாதைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பதாதைகளை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் , நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஒக்டோபர் 8-ம் திகதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.