190
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூரில் இன்று திங்கட்கிழமை இப் போராட்டம் நடைபெற்றது.
அனுராதபுரம் சிறையுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம்,வவுனியா, கொழும்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் சமுக நீதிக்கான அமைப்பு உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துயுள்ளனர்.
Spread the love