நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு டு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ராம் உல் ஹக் தலைமையிலான குழுவினர் இன்று இலங்கை செல்கின்றனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான நாடுகளுக்கிடையிலான இராணுவ பாதுகாப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே அந்தக் குழுவினர் இலங்கை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படையினரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணல் உள்ளிட்டவை சம்பந்தமாக இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது