இந்தியாவின் வடமாநில விவசாயிகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்தி வரும் பேரணியை தடுத்து நிறுத்தும் முகமாக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதனையடுத்து டெல்லி எல்லையில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இன்று கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக சென்றார்கள்.
இதன்போது உத்தர பிரதேசம் மற்றும் – டெல்லி எல்லையில் அதிரப்படையினர் விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய முடியாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்தமையினால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டள்ளது.
இதனையடுத்து விவசாயிகள் கலைந்து செல்வதற்காக காவல்துறையினர் தண்ணீர்ப்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டும் வீசியதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.