167
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 7-ம் திகதி பெங்களுரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் உள்ளன.
55 நாட்கள் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி இடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் திருமுருகன் காந்திக்கு பிணை வழங்கியுள்ளன.
Spread the love