144
பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து மாடு ஒன்று பாதையின் குறுக்கே வந்ததனால் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் பூநகரி மற்றும் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love